முகம் என்கிற சிறுகதை, மூர்க்கமான மனிதர்களைக் கொண்டு நகர்வது. பன்றி வளர்ப்போரும் அவர்களைச் சுற்றி இருக்கிற மனிதர்களும், அவர்களுக்குள்ளான உறவுகளையும் மையப்படுத்தி எடுத்துக் கொண்ட களம். தலைப்பிரட்டைகள் என்கிற கதை தன்னுடைய சாதி அடையாளத்தால் அவமானங்ளுக்கு உள்ளாகும் ஒருவனின் கதை. அதுவே கதையின் மையமாகவும் தேவையான அளவு பேசப்பட்டும் இருக்க, அவன் அன்றைக்கு அதை எதிர்கொள்கிற விதம் இன்னொரு கதையாகவே தோன்றுகிறது. இன்னொருவன் கதையில் ஏற்கெனவே ஒருபால் உறவு இருக்கிறது