1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச்...
சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக் குரல் றஷ்மியுடையது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வை’ச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின்...
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள்...
1990 காலப் பகுதிகளில் இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கால மக்களையும் போர்க்காலச் சூழலையும் இயல்பாக வடிவமைத்துக் காட்டுகிறது. சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியில் தனது ‘நட்டுமை’ நாவலுக்கு முதற்பரிசு பெற்றவரும், ‘வெள்ளி விரல்’ என்ற தனது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் தேசிய மற்றும் மாகாண சாகித்ய விருதுகளை ஒரே ஆண்டில் (2011) பெற்றவருமான, ஆர்.எம். நௌஸாத்தின் மற்றுமொரு படைப்பு ‘கொல்வதெழுதுதல் 90’.
காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி – 75’ கவிதை, இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலின் நூலாக்கம் இது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் – 1930களில் – கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்...
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற...
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத்...
போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இதுதான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக...