எப்படிப் பிறப்பு, வாழ்க்கை, காதல், சோகம் என எழுத நிறையக் களங்கள் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே இறப்புக் குறித்து எழுதக் களங்களும், கதைகளும் இங்கே ஏராளமாய் இருக்கின்றன. எனது சிறுகதைகளில் சாவு குறித்த கதைகள்தான் அதிகமாக இருக்கும். எப்பவுமே இறப்பு என்பது மிகப்பெரிய பேசு பொருள்தான். அதைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது. அதை அவ்வளவு சீக்கிரம் பேசித் தீர்த்து விட முடியாது. அதெல்லாம் தீராக்கதை. ஒரு இறப்புக்குக் கூடும் கூட்டமும், இறப்பைக் கேள்விப்பட்டதும் ‘அட..நல்ல மனுசனுல்ல’ என வரும் வார்த்தையுமே இறந்தவர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை சொல்லிவிடும். அப்படியான ஒரு வாழ்க்கையைப் பற்றித்தான் இந்நாவல் பேசுகிறது.
சாவு வீடு, அந்த வீட்டு மனிதர்கள், உறவுகள், பச்சை கொண்டு வருவது, நீர்மாலை எடுப்பது, குடம் உடைத்தல், சுடுகாட்டுச் செய்முறைகள், அடக்கம் பண்ணுதல், காடாத்துதல், கருமாதி என எங்கள் தேவகோட்டை வட்டார நிகழ்வுகளை, அதே வட்டார வழக்குச் சொற்களோடு எழுதியிருக்கும் நாவல் தான் ‘சாக்காடு’.
Reviews
There are no reviews yet.