Description
சேலம் சிறுகதைகள்
தலித்திய சிறுகதைகள், பெண்ணிய சிறுகதைகள், பள்ளிச்சூழலை மையப்படுத்திய சிறுகதைகள், அப்பா சிறுகதைகள், அம்மா சிறுகதைகள் எனப் பல வகையில் சிறுகதைத் தொகுப்புகள் வாசிக்கக் கிடைத்துள்ளன. எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் சங்கீத சிறுகதைகள் எனத் தொகுத்துள்ளார். எழுத்தாளர் சா. கந்தசாமி ரயில் பயணத் தொடர்பான சிறுகதைகளைத் தொகுத்து சாகித்ய அகாதெமி மூலம் வெளிவந்துள்ளது. மகாபாரதத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்தளித்துள்ளார் சுப்பிரமணி ரமேஷ். இவை தவிர பிராந்தியம் வாரியாகவும், வட்டார வாரியாகவும் சிறுகதைத் தொகுப்புகள் தொகுப்பாளர்களால் தொகுத்து வெளி யிடப்பட்டன. எழுத்தாளர் பெருமாள் முருகன் கொங்கு சிறுகதைகள் என்று ஒரு தொகுப்பைத் தொகுத்தளித்தார்.
தஞ்சை சிறுகதைகள், நெல்லை சிறுகதைகள், மதுரைச் சிறுகதைகள், சென்னைச் சிறுகதைகள் என மாவட்ட அளவிலும் சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. மாநிலம் தாண்டி பம்பாய்ச் சிறுகதைகள், பாகிஸ்தான் சிறுகதைகள், சிங்கப்பூர் சிறுகதைகள், ஈழச் சிறுகதைகள், பெங்களூர் சிறுகதைகள், டில்லி சிறுகதைகள், தென்னிந்தியச் சிறுகதைகள், வங்காளச் சிறுகதைகள் எனத் தொகுப்புகள் வந்துள்ளன. அவ்வகையில் சேலம் சிறுகதைகள் தொகுக்கப்பட வேண்டுமென விரும்பி சேலம் படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டன. ஏற்கனவே ‘சேலம் கவிதைகள்’ என ஒரு தொகுப்பை எழுத்தாளர் நஞ்சுண்டன் தொகுத்துள்ளார்.
சேலம் சிறுகதைகள் என்றால் சேலத்தை மையப்படுத்திய சிறுகதைகள். சேலத்தில் மையங் கொண்டுள்ள அறுபத்தாறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாகும். சேலத்திற்கு ஓர் அடையாளமாகும்.















Reviews
There are no reviews yet.