திண்ணமாக நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவர் ஆவார். நபியின் மனைவியரோ அவர்களுக்கு அன்னையர் ஆவர். (அல்குர்ஆன்-33:6) இறைத்தூதர்களின் மனைவிமார்களை ‘உம்மஹாத்துல் முஃமினீன்’ எனக் குறிப்பிடுகிறான் எல்லாம் வல்ல இறைவன். உம்மஹாத்துல் உம்மத் என சொல்லவில்லை. உம்மத்தின் அன்னையர் என சொல்லாமல் நம்பிக்கையாளர்களின் அன்னையர் என்கிறான். இதிலும் ஒரு நுட்பம் பொதிந்துள்ளதை அறியலாம். உம்மத் என்பதில் நல்லோர், தீயோர் அனைவரும் அடக்கம். ஆனால் நம்பிக்கையாளர் (முஃமின்கள்) என்பதில் சிறந்தோர், சான்றோர் மட்டுமே அடங்குவர். அந்த சிறப்புக்குரிய அன்னையரின் வரலாற்றை இந்நூல் விரிவாக கூறுகிறது. |