‘பர்ஸா’ என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். ‘பர்தா’வின் எதிர்ப்பதம். இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக் கேள்விக்குட்படுத்துகிறாள். பெண் என்பதால் மதம் தன்னை உதாசீனம் செய்கிறதா என்று விசாரணை செய்கிறாள். கதீஜா மும்தாஜ்: கதீஜா மும்தாஜ் (1955) டாக்டர் கதீஜா மும்தாஜ் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம் காட்டூரில் சம்சுத்தீன் பாத்திமா தம்பதியரின் மகளாகப் பிறந்தார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இது தன் அனுபவம் சார்ந்து எழுதிய முதல் நாவல்.