நவீன தமிழ்ப் படைப்பாளிகளில் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு உரைநடை இலக்கியத்தில் அவர் செலுத்தும் தீவிரம். சங்கப் பாடல்களினுள்ளும் நீதிநூல் களிடத்தும் சிற்றிலக்கியங்களிலும், தமிழின் ஒப்பற்ற காவியமான கம்ப இராமாயணத்திலும், தெய்வமாக்கவி பாரதியினிடத்தும், நவகவிதைப் புலத்திலும் நகை எனும் மெய்ப்பாடு தேடும் முயற்சி இந்த நூல். இதுவரை மரபுவழிப் பேராசிரியர் எவரும் செலவு மேற்கொள்ளாத திக்கில் இசையின் இப்பயணம் சாலவும் நன்று. – நாஞ்சில் நாடன்