இந்தியாவில் 25 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள், படியும் நிழல்கள், எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றைக் குறித்த பண்பாட்டு அரசியல் பார்வைக் கட்டுரைகளைக் கொண்டது ‘பாதுகாக்கப்பட்ட துயரம்.’ சுயானுபவம் மிளிரும் திறந்த மொழியில் உயிர் உணர்ச்சி கலந்த நடையில் அமைந்த மதம் சார்ந்த, ஆனால் மதச்சார்பற்ற கட்டுரைகள் அடங்கியது இந்நூல். மைய நீரோட்டத்தில் பொதுப்புத்தி சாராத முஸ்லிம் சமூகம் பற்றிய கட்டுரைகள் தமிழ்ச் சூழலில் அபூர்வமானவை. அவ்வகையில் ‘பாதுகாக்கப்பட்ட துயரம்’ அபூர்வம்.