யுகபாரதி, கவிஞர் மற்றும் திரைப்பாடலாசிரியர். இந்நூல் அவருடைய திரையிசைத் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நூல். இளையராஜா, சலீல்செளத்ரி, வித்யாசாகர், தேவா ஆகியோரின் திரையிசைப் பயணங்கள் குறித்தும் பாடல்கள் குறித்தும் மொழி மிக விரிவாக எழுதப்பட்டுள்ள நூல். திரைப்பாடல்களை மொழி அடிப்படையில் அணுகி அவற்றை சுவையையும் அழகையும் இந்நூலில் புலப்படுத்தியுள்ளார். திரைப்பாடல் ஆர்வமுடைய அனைவரையும் ஈர்க்கும் இக்கட்டுரைகள், திரையிசையின் புதிய திறப்புகளாக அமைந்துள்ளன. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட யுகபாரதி, கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை எட்டுக் கவிதைத்தொகுப்புகளும் எட்டுக் கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்நூல், இவருடைய ஒன்பதாவது கவிதைத் தொகுப்பு. வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.