ஒரு படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்ளாமல் அணு அணுவாகத் திரையை ரசித்துத் திளைத்த ஒரு ஆழ்மனத்தின் அகப்பதிவுதான் இந்தக் கட்டுரைகள். வெறும் ரசனை சார்ந்து மட்டுமல்லாமல் திரைப்படங்களைக் குறித்த விரிவான பார்வையுடனும், திரைக்கலைஞர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் (விக்கிபீடியா தகவல்கள் அல்ல), பிறமொழிப் படங்களைக் குறித்தான ஆழமான கருத்துக்களுடனும் இந்தப் புத்தகம் நம் கைகளில் தவழ்கிறது. வெகு அபூர்வமாகத்தான் இத்தகைய புத்தகங்கள் மலரும். இதன் எளிய மொழியும், வெளிப்படையாக உள்ளத்திலிருந்து வரும் சொற்களும் படிப்பவரின் சொந்த அனுபவமும் சேர்ந்து அழகானதொரு வாசிப்பானுபவத்தை அள்ளித் தருகிறது. – கவிஞர் உமா ஷக்தி