நம் பயன்பாட்டிற்குப் பிறகு நாம் துாக்கி எறியும் ஞெகிழிப் பொருட்கள் என்னவாகின்றன என உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டிலிருந்து (அ) தெருவிலிருந்து குப்பைகளை அகற்றும்போது பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக, அதைப்பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், கழிவுப் பொருட்கள் குறித்து நாம் போதிய கவனம் செலுத்துவதே இல்லை என்பதுதான் இன்றைய நிலை. நம் வீட்டை விட்டு குப்பைகள் அகன்றால் போதும் என்ற மனநிலை இருப்பதால்தான், நாம் துாக்கி எறியும் கழிவுப் பொருட்களில் ஞெகிழிப் பொருட்கள் என்ன, அதனால் நமக்கு ஏற்படும் விளைவுகள் எவ்வளவு என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை.