சவப்பெட்டியின் மேல் பூங்கொத்துகளை வைப்பது, உயிரோடிருக்கும் போது அனுபவித்த வேதனைகளுக்கு ஒத்தடம் கொடுத்ததாக அர்த்தம் ஆகாது.”” ஆமாம், குத்துச்சண்டை ஜாம்பவான் முஹம்மது அலீ, தான் வாழ்ந்த காலத்தில் குத்துச்சண்டை களத்தை தாண்டியும் வினையாற்றினார். ஆனால், அந்த வீரப் பிரதாபங்களை மறைத்து விட்டு ஒரு குத்துச்சண்டை வீரனாக மட்டும் மட்டுப்படுத்துவது வரலாற்று அறியாமை ஆகும். ஆதலால், அலீ-யின் வேறு பரிமாணங்களை அறிய இந்த நூலை வாசிப்போம். விளையாட்டு – வீரம் – புகழ்: இந்தச் சமன்பாட்டை மாற்றி, விளையாட்டு – வீரம் – விடுதலை என நவீன சமூக விடுதலைக் கொள்கையை முன் வைத்த முஹம்மது அலீ-யை, கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார், விளையாட்டு சிறப்பு செய்தியாளர் குதுப்தீன், பேச்சாளர், எழுத்தாளர், தமிழ்த்துறை பேராசிரியர் அப்துல் சமது – ஆகியோரின் எழுத்துக்கள் வழி அறியலாம்.