விதியை நம்பி வாழத்தெரியாது தவிக்கும் மாரப்பன்.பரம்பரையான பழைய பழக்கங்களை நம்பி அல்லல்படும் அவன் மனைவி,மகள்,மகன்,திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் சிறந்த கலைதன்மையுடன் கையாளப்பட்டிருக்கின்றன.நாற்று நடுதல்,காலை எடுத்தல்,ஒரு கன்றின் பிறப்பு போன்ற நடவடிக்கைகள் ஆழ்ந்த கவனத்துடன் சிதரிக்கப்படுகின்றன.கொங்குநாட்டு கிராம வாழ்க்கையில் அந்த மண்ணின் மணம் வீசி,வாசகரை அந்த சூழ்நிலையுடன் ஒன்றச் செய்து விதுகிரது.கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சிக்களைத் தாக்குகிறது.சின்னப்ப பாரதி,தாம் படைத்த கதை மாந்தரை பிரமிப்புட்டும் கட்டுப்பாட்டுடன் நடத்திச் செல்கிறார்.இத்தகைய காலை வண்ணம் நிறைந்த இந்தப் படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அறிய சாதனை.நூறாண்டு வளர்ச்சியில் பத்து தமிழ் நாவல்களைத் தேர்ந்தெடுத்தால் அவைகளின் தாகம் ஒன்றாக இருப்பது வரலாறு.