தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது இந்நாவல். பி.ஏ. கிருஷ்ணன் இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998இல் வெளிவந்தது. அதை அவரே இப்போது தமிழில் எழுதியிருக்கிறார். கிருஷ்ணனின் முதல் நாவல் இது. பி.ஏ. கிருஷ்ணன்: பி.ஏ.கிருஷ்ணன் (பி. 1946) பி. அனந்தகிருஷ்ணன் மத்திய அரசுப் பணியிலும் தனியார், பன்னாட்டு நிறுவனங்களிலும் பல உயர் பதவிகள் வகித்து ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலத்தில் திறமையாக எழுதும் மிகச் சில படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். மனைவி ரேவதி கிருஷ்ணன் தில்லித் தமிழ்ப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவரும் தில்லியில் வசிக்கிறார்கள். மகன் சித்தார்த், மருமகள் வினிதா அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மின்னஞ்சல்: tigerclaw@gmail.com