ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.