நிலத்தையும் மண்ணின் பூர்வகுடி மக்களையும் இணைக்கும் கானா பாடகர்களது களமாகி இருக்கிறது, ‘வியாசை’. எழுத்தின் புது முயற்சியாகவும் வாசகர்களின் கவனத்தைக் கோரும் கதையாகவும், ‘கார்னர் சீட்’ இடம்பெற்றுள்ளது. காமத்துடனான மனிதனின் போராட்டத்திற்கும் அல்லலுக்கும் ‘உயிர்அடவி’. ஆணவக்கொலைகளுக்கு பலியான எண்ணற்ற இளைஞர்களின் பிரதிநிதிகளாக, ‘யாதுமற்றவர்கள்’ பாபுராஜ், திவாகர்,மதன் போன்றோரின் குமுறலை உணர முடிகின்றது. வலியை வைராக்கியமாக்கிய ‘ஆகாசப்பூ’ ஆனந்தி, ‘வலி’ யில்லா வாழ்வே சாபமாகிப்போகும் தாழ்வு மனப்பான்மையில் கூனிக்குறுகும் ஆரத்யா என வெவ்வேறு வகைமையிலான கதைக்களங்களும்
இருவேறு கதாபாத்திரங்களும் நேர்த்தியாக
கைவரப்பெற்றிருக்கின்றது. கடந்தகால காதலின் இரணங்களுக்கான வருடலாய் ‘நிராதரவாய்’, ‘குருத்தோலை’, ‘கடவுச்சொல்’ கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.