எழுதுவதும் வாசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் நினைத்ததை, நம் வட்டார வழக்கில், அது சிறுகதையோ நாவலோ எதுவாக இருந்தாலும், நாம் நினைத்தபடி எழுதி முடிப்பதென்பது சற்றே சவாலானது என்றாலும் அப்படி எழுதுவதில் மன திருப்தியும் சந்தோசமும் கிடைப்பதுடன் வெளிநாட்டு வாழ்க்கையின் தனிமையின் வலியையும் கொஞ்சமேனும் குறைத்துக் கொள்ள முடிகிறது என்பதாலேயே நான் தொடர்ந்து இந்தப் பாதarயில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருக்கும் பத்துக் கதைகளும் வாழ்வியலைப் பேசுபவை. இது எனது பத்தாவது புத்தகம். ‘எதிர்சேவை’, ‘பரிவை படைப்புகள்’, ‘வாத்தியார்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்களும் ‘வேரும் விழுதுகளும்’, ‘திருவிழா’, ‘சாக்காடு’, ‘காளையன்’, ‘மருள்’ என்ற நாவல்களும் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ‘உள்ளூர் இலக்கியம்; என்னும் கட்டுரைத் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
– பரிவை சே.குமார்
Reviews
There are no reviews yet.