சிலர் தங்கள் புதினங்களை அதிதீவிர இலக்கிய வாசிப்புக்கென்று ஒதுக்கிவிடுவார்கள். வேறு சிலரோ, ‘எனக்கு எல்லாம் தெரியும் பார் என்கிற எண்ண ஓட்டத்தோடு எழுதிக்கொண்டிருப்பார்கள். இவர்களிலிருந்து சுரேஷ் வேறுபடும். இடம் எதுவென்றால் தன் புதினத்தை எளிய மொழி நடையில், இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய களத்தில் நின்றுகொண்டு தன்னுடைய கருத்து என்று எதையும் உட்படுத்தாமல், நீள் வர்ணனைகளோ விவரணைகளோ இல்லாமல், அக உளவியல் சிக்கல்களைச் சொல்கிறேன் என்று நீண்ட அமைப்புகளை உருவாக்கி வாசகனைப் ‘படுத்தி’ எடுக்காமல், தான் வாக்கிய சொல்ல வந்ததை நேர்பட தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
தெளிவாகவும், போதுமான அளவுக்கு உணர்ச்சி பூர்வமாகவும், போனால் போகிறதென்று ஆங்கா காங்கே நகைச்சுவை வரிகளோடும், விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கதைக்களனைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் சுரேஷ்.
-ஆசிப் மீரான் அணிந்துரையிலிருந்து..