சமகாலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை. நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள் ஆகியவற்றினூடே பயணிக்கும் அரவிந்தனின் அணுகுமுறை படைப்பின் ஆதார சுருதியையும் படைப்பாளுமைகளின் ஜீவனையும் ஸ்பரிசிக்க முயல்கிறது. லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இமையம், ஆ. இரா. வேங்கடாசலபதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பற்றிய விரிவான அலசல்கள் இந்நூலில் உள்ளன. 1990களுக்குப் பிந்தைய நவீன இலக்கியப் போக்குகளின் முக்கியக் கூறுகளை அவற்றின் பின்புலத்தோடும் தாக்கங்களோடும் அணுகும் கட்டுரைகளும் தொகுப்பில் உள்ளன.