காலத்தைக் கடந்து நிற்கும் இலக்கியங்கள் தொடர்ச்சியாகச் செம்மைப் படுத்தப்பட்டுக்கொண்டே வரும். வால்மீகியின் கதையை விருத்தங்களால் அலங்கரித்துத் தமிழுக்கு அழகு சேர்த்தான் கம்பன். கம்பன் பார்வைக்கு நவீனத் தமிழ் விருத்தங்களால் அழகு சேர்க்கிறது இந்தப் புத்தகம். 26 நூற்கள், 12 காப்பியங்கள் படைத்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ராமகாதைக்கு தன் பார்வையைத் தந்திருக்கிறார். மரபுக்கவிதைகள் மறந்துபோகும் இந்தக் காலத்தில் தன் யாப்பிலக்கண அறிவால் விருந்து வைத்திருக்கிறார். தமிழுக்கு ஒரு புதிய அணியை உருவாக்கி, இதைப் பதிப்பிக்க எங்களுக்கு அனுமதி தந்த காப்பியக்கோவுக்கு நன்றி சொல்லி இந்தக் காப்பியத்தை எங்கள் முதல் நூலாக வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.