சமூக வலைதளங்களின் உபயத்தால் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்கள் பொதுவெளியில் பெருகிவிட்ட காலம் இது. பெரும்பாலான படங்களைப் பற்றிய அலசல்களும் தீர்ப்புகளும் படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே வெள்ளமாகப் பெருகும் காலம். இவ்வளவு தெறிப்புகளுக்கு மத்தியில்...
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன....
இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில்...
சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துக்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவை எளிமையாகவும் ஆழமாகவும் சமகாலப் பிரபல தமிழ்,...
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்று. அது மட்டுமல்ல இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் அரசும், அறிவுலகமும், கல்விப்புலமும் இதை உதாசீனம்...
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக...
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப்...