நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோனியோ கிராம்சி இருந்தார் அவருக்கு வயது 35, 1928இல் அவர் விசாரணைக்கு கட்படுத்தப் பட்டபோது, அரசாங்க வழக்கறிஞர் தனது வாதத்தின் முடிவில்...
"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள் தரும் வாழ்க்கை தரிசனங்களும் சொற்கள் இணைவின் தாலயமும் மொழியின் கவித்துவ அனுபவமும் அவர்களை வசீகரிக்கின்றன. லா.ச.ரா.வின் பிரசித்தமான நாவல்களில் ஒன்று "அபிதா". க.நா.சு. தொடங்கி இன்றைய விமரிசகர்கள் வரை அனைவரின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் படைப்பு. வாழ்வின் பல வண்ணங்கள் கலந்த ஒரு ஓவியம் "அபிதா". ஆன்மிகம், அதீத அனுபவம், பாலியல், காதல் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுகளின் வடிகாலாக திகழ்கிறது இந்நாவல். இதன் அதீத அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட, சராசரி மனிதர்களுக்கு ஏற்படாத அனுபவங்களாகத் தோன்றும். ஆனால், எந்த ஒருவருக்கும் எந்த நேரத்திலும் எந்த விஷயத்திலும் அகப்புலன்களின் வழியே உய்த்துணரப்படும் மெய்யனுவமே அபிதா என்பதை ஆழமான வாசிப்பில் உணர முடியும். "அபிதா" தரும் பரவச அனுபவம் முற்றிலும் புதுமை-யானது. எந்த இஸத்துக்குள்ளும் அடங்காத தத்துவ தரிசனம், சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இயங்கும் ஆன்மீகம், நாவல் முழுக்க இழையோடும் உறவின் கவிதா சோகம் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க "அபிதா" புது முகம் காட்டும். இசையைக் கேட்பது போல், ஓவியங்களைப் பார்ப்பது போல், லா.ச.ராவைப் படிப்பதும் படிப்பதில் இழைவதுமே ஒரு அனுபவம். அந்த அனுபவமே "அபிதா"வின் பலம்.
மருத்துவச் சொற்களால் மாபெரும் கவிதைச் சுவடியாய் இந்தப் புத்தகத்தை இயற்றிருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் ஆச்சர்யங்களைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு கவிதையும் அழுகைகளோடு கண்ணீரின் பிசு பிசுப்பை பரிசளிக்கிறது. ஏழ்மையின் சூடு குறையாமல் எளிய மனிதர்களின் வேதனையை பாசாங்கு இல்லாமல் நிஜமாய் பதிவு செய்து இருக்கிறார். தமிழ்க் கவிதை வரலாற்றில் மருத்துவத்தால் தனது மொழியை வசப்படுத்தி அற்புதமான கவிதைகளால் நம் கண்களை குளமாக்குகிறார். வலியை நகலெடுத்து கவிதையாய் வடித்து இருக்கிறார்.
மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. சாப்பிட்ட உடனே...
பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒரு பக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன.
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன்...
தூத்துக்குடி, திருக்குறுங்குடி, மணப்பாடு, பூவந்தி, மேலப்பாளையம், பூதப்பாண்டி, கழுகுமலை, சிங்கிகுளம், பேகம்பூர் எனப் பல திசைகளில் இருந்து சதுக்கை (ஜங்சன்) எனும் தாமிரபரணியின் தீரவாசத்திற்கு மனித உறவுகளை அழைத்து வந்து குன்னிமுத்து மாலை கையில் கொடுத்து ஆடவிட்டு, அவர்கள் விளையாட அதன் வாயிலாக கண்டடையும் நீலகண்டம் நகரம் தான் அரம்பை கதை.
இது அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றின் மீது சுமத்தப்படும் கற்பனை முயற்சி.
செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம், மொழியின் இயங்கியல் ஓர் உடம்பின் பால் தன்மையை மாற்றியமைக்க வல்லது. இது, கல்லை நட்டு தெய்வம் என்று வணங்கும் மனவேதிமையின் பாற்பட்டது. கல்லை உயிர்ப்பிக்கும் மொழி, உடம்பில் கெட்டிப்பட்டுப்போன பாலடையாளத்தை மாற்றியமைக்காதா? விலங்கு, மனிதர், கடவுள் இவை மூன்றிற்குமிடையே நிகழும் ரசவாதம் மொழியின் விளைவு. அவளொரு ரசவாதி. அவளால் இந்த உப்புக் கடலைப் பாற்கடலாக மாற்றமுடியும். அவளுடம்பு பகலில் ஒன்றாகவும் இரவில் வேறொன்றாகவும் உருமாற்றமடைந்தது. கோயில்கொண்ட செங்கழுநீர் அம்மனின் வாடை அவளுடம்பில் கமழ்ந்தது. தன் விருப்பமில்லாமல் அவளுடம்பை யாராலும் தொடமுடியாது என்றாள். மழைக்குள் நடந்தாலும் தன்னுடைய இசைவின்றி மழையால் தன்னை நனைக்க முடியாது எனச் சொன்னபோது என்னால் நம்பாமலிருக்க முடியவில்லை. ஆம், அவளொரு மாயயெதார்த்தப் பனுவல்.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழிகளிலும்...
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதை தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட மண் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறது.
உன் அம்மாவிடமிருந்து நான் பிரிந்ததில் என்ன தவறைக் கண்டாய் மகளே? நான் ஏன் இந்த நாவலை அணங்கிலிருந்து தொடங்கவேண்டும்? ஏன் ஓர் ஐஸ்கிரீமால் மதுரையை எரிக்க முடியாதா? வலியாக இருக்கிறது. தமிழர்கள் நெருப்பாலும் கொத்துக்குண்டுகளாலும் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன் உன் நாவலை கண்ணகியிலிருந்துத் தொடங்குகிறாய்? தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்த முதலும் கடைசியுமான ஒரே வேந்தன் மற்றும் பாவலன் இளங்கோதானே? அதிகாரத்தின் கொடுங்கோண்மையை எதிர்த்த முதல் குரல் கண்ணகியின் குரல்தானே? அதனால் கண்ணகியிலிருந்துத் தொடங்குகிறேன்.
உனது உதடுகளைத் தின்று தீர்ப்பது எப்படி மாதவி? கடல் அலைகள் எதிர்கொண்டு ஒன்றோடொன்று மோதிக்கொள்வதுபோல உனது மேல் கீழுதடுகள். உப்புச் சொற்களாக தமிழ் வெளியெல்லாம், புகாரின் கடல் வெளியெல்லாம் மிதக்கின்றன நம் முத்தங்கள். முத்தங்களை ஒன்றுகூட்டி செய்யப்பட்டவள் மாதவி. அணங்கே கொஞ்சம் வழிவிடு, என் நாவலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.