சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், சீனம், ஜப்பான், திபெத், கொரியன், சிங்களம், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இவை அனைத்தையும், எந்தத் தனிமனிதராலும் அவரது வாழ்நாளுக்குள் முழுவதுமாகக் கற்றறிந்துவிட முடியாது. எனவே பௌத்த நூல்களில் சேகரமாகியிருக்கும் அறிவுச் செல்வத்தைத் தொகுத்தளிக்கும் நூல்களுக்கு, ஒரு சமகாலத் தேவையும் நியாயமும் எப்போதும் இருக்கவே செய்கிறது. பௌத்த ஞானப் பிழிவாக இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன். நம் பௌத்த அறிவு மேலும் விரிய உதவுவதுடன், வாசிப்பின் மகிழ்வையும் இந்நூல் தூண்டிவிடுகிறது.