நாம் வாழ்கின்ற ஒரு நாட்டில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுகறைத் தெரிந்தே செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது மிகவும் கொடுமை. அப்பாவும், தியோ டோனியும் தவறு என்று தெரிந்தும் ஸ்மித்தைக் கொலை செய்யுத் திட்டமிட்டதும் அதுபோலத்தான். ஆனால், நாட்டை ஆள்பவர் ஒரு சாத்தானைப் போல இளம் பெண்களின் கற்பைப் பறிப்பவராகவும், அப்பாவி மக்களைக் கொன்று பாதுகாப்பாக வாழ முடியாத இடமாக மாற்றி வைத்திருப்பவராகவும் இருக்கின்றபோது என்ன செய்வது? தவறுகளைச் சரியாகப் பார்க்கும் சூழலுக்குள் நமது மனம் சிக்கிக் கொள்வதுதானே இயல்பு.