கல்கி இதழில் வெளியான ‘ரோஜா’, கடைந் தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத் தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி.