ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன