‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது.