மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது.
சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது. வடிவம் கைவராமல் போய் உதிர்ந்தாலும் ருசிப்பதற்கு சிறுகதை பூந்தியா என்ன? பலர் அப்படி நல்ல சிறுகதைக்கு உதாரணங்கள் கேட்ட போதெல்லாம் தேடித்தேடி பெரிய எழுத்தாளர்களின் பல சிறுகதைகளை வாசிக்கச் சொல்லி இருக்கிறேன்.
இனி பெரிய சிரமமின்றி… இந்தச் சிறுகதை தொகுப்பைச் செல்வேன். பூங்காவில் அசைந்தாடிக்கொண்டு இருக்கும் ரோஜாக்கள் வசீகரம்தான். நமது தோட்டத்து மல்லிகைப்பூவை விடவா?
–சசி S குமாரின் அணிந்துரையிலிருந்து