எழுத்துலகில் கவிதையை நயம் சுவைக்கச் சுவைக்கப் படைத்து, எதுகை மோனைகள் இணைய கவிஞர்களாக வலம் வரலாம்.
கட்டுரை எழுதி விறுவிறுப்பைக் கூட்டி, எதிர்பார்ப்புகளைத் தொடர வைத்து கட்டுரையாளராகக் கோலோச்சலாம்.
இங்கு கதை ஆசிரியராக தங்கமங்கை பிரபாவதி செந்தில் அவர்கள் கதையை விறுவிறுப்போடு, அடுத்து என்ன? முடிவு என்ன? என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு கதையிலும் ஒன்று இரண்டு திருப்பங்கள், கற்பனையை வரவழைக்கக் கூடிய பகுதிகள், அதோடு இன்றைய சமூக செய்திகளையும், கூடவே முரண்பாடுகளையும் களைந்து அதை இலகுவாக்கி, குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுக்கு ஒப்ப பிசைந்து எப்படிப் பக்குவமாக ஊட்டுவோமோ அதுபோல வாசிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற யுக்தியை சிறப்பாக கதைகள் முழுமையும் கையாண்டுள்ளார்.
மீனா திருப்பதி
அரிமா மாவட்ட தலைவர்,
தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம்
துணைத் தலைவர்.