தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக ‘அளவில்லாத மலர்’ தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன.