காலம் என்பது பொன் போன்றதல்ல; மாறாக உயிர் போன்றது. காரணம், பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் – உயிர் இருந்தால். ஆனால் உயிரே போனால்… ஆம்! காலம் உயிரைப் போன்றதுதான். என்ன விலை கொடுத்தாலும் அதைத் திருப்பி வாங்கமுடியாது என்ற மறுக்க முடியாத உண்மையைப் பல இடங்களில் நம் தலையில் ‘நங்’கென்று ஆணி அடிக்கும் விதமாகச் சொல்கிறது புத்தகம். திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது, நம் உலக இச்சைகளைக் கட்டுக்குள் கொண்டு வர. மேலும் நேரத்தைச் சேமிக்கும் வழிகள், வேலைகளை எப்படிப் பிரித்துச் செய்வது, |