காஷ்மீர், குஜராத், கோவை போன்ற இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைக் களங்களில் காலச்சுவடு எடுத்த ஆணித்தரமான நிலைப்பாடுகளுக்கு இப்பதிவுகள் சான்றாகின்றன. இஸ்லாமியர் மீதான இந்துத்துவத்தின் தாக்கதல்களுக்கு உரிய எதிர்வினைகள், இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் அச்சுறுத்தல்கள் பற்றிய பார்வை ஆகியன நடுநிலையோடு பதிவாகியுள்ளன. இந்திய அரசியல் அமைப்பில் இஸ்லாமியருக்குச் சம உரிமை கோரும் குரல்களும் பதிவாகியுள்ளன. சுமார் 15 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இஸ்லாமின் பல்வேறு அம்சங்களைக் கவனப்படுத்தி விவாதத்திற்கு உள்ளாக்கிய பதிவுகள் இவை. ‘காலச்சுவடு’ இதழை இஸ்லாத்திற்கு எதிராக நிறுத்தும் முயற்சிகளுக்கு இப்பதிவுகள் சவாலாக விளங்குகின்றன.