வை.கோ. என்று அழைக்கப்பட்ட கோவிந்தன் பெயரைச் சொல்லும்போது சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுரமும் கூடவே நினைவுக்கு வந்தே தீரும். அன்று இருந்த எல்லா பத்திரிகைகளிலிருந்தும் முழுக்க மாறுபட்டு அமெரிக்க ‘டைம்’ பத்திரிகை மாதிரி என்று அதைப் பற்றி சொன்னதுண்டு. ‘சக்தி பிரசுரம்’ என்றால் பிரிட்டீஷ் பிரசுரமான பெங்குவின் வெளியீடு மாதிரி என்று கருதப்பட்டதுண்டு. லட்சிய பத்திரிகை, லட்சிய பிரசுரம் இரண்டையுமே தன் வாழ்க்கை நோக்கமாக கொண்டவராகவே வாழ்ந்த வை. கோவிந்தன் தமிழ் பிரசுர உலகில் தனித்து நின்ற ஒரு லட்சிய பதிப்பாளன். இன்று அவர் மாதிரி வேறு ஒரு பதிப்பாளன் கிடையாது