1937இலிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனின் அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்களைக்கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும் அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ. பத்மநாபனின் சளைக்காத உழைப்பு – பாரதியை நெருக்கத்தில் பார்க்க வைத்திருக்கிறது. பாரதி தலைப்பாகை, கம்பு சகிதமாக காரைக்குடியில் படம் எடுத்துக்கொண்டபோது – அந்த அனுபவம் எந்த மிகையும் இல்லாமல் பதிவாகியிருக்கிறது. பல உண்மை சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய வழவழப்பான காகிதத்தில் வெளிவந்துள்ள செம்பதிப்பு.