அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில், ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வழிமறிக்கிறார் ஆனந்த். ஆனந்த்: கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் ‘க’, ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’, யோஸே ஸரமாகோவின் ‘அறியப்படாத தீவின் கதை’ ஆகிய நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல்: anandh51ad@gmail.com