நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்தண்டன் முதல் ஜானு வரையிலான ஆதிவாசி சமூகம் நாகரீக உலகால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆதிவாசிகளுக்கு அவர்களது காலடி மண்தான் கருப்பை. வீடு. இடுகுழி. எனினும் அந்த மண்ணில் வாழவும் சாகவுமான அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட நிலையில் அதைத் திரும்பப்பெற அதிகாரமையங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நிகழ்கால உரிமைக் குரலாக உயர்ந்தவர் ஜானு. ஜானுவின் கதை ஒரே சமயத்தில் ஒடுக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாறும் ஆகும்.