இரு சிறுகதைத் தொகுப்புகளான கனவு மிருகம், துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதைக்குப் பிறகு பாலசுப்ரமணியன் பொன்ராஜின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. பதினைந்து ஆண்டுகளாக எழுதப்பட்ட கவிதைகளில் சில மணல்வீடு, மந்திரச்சிமிழ், கணையாழி, தடம் ஆகிய இதழ்களில் அவ்வப்போது பிரசுரமாயின எனினும் தொகுப்பதில் இருந்த தயக்கத்தின் காரணமாக கவிதைகள் புத்தக வடிவம் பெறவில்லை. கவிதை மீதான மரியாதையின் காரணமாகவும் கூட. இப்போது புதிதாக மரியாதைக் குறைவு ஏற்பட்டு இக்கவிதைகள் தொகுக்கப்படவில்லை எனச் சொல்லும் பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ‘இவையும் கவிதைகள் என ஏற்கப்படும்’ எனும் நம்பிக்கை புதிதாக எழுந்திருக்கிறது என்கிறார்.
பெரும்பாலான கவிதைகள் நள்ளிரவுக்குப் பிறகு, விளக்குகளின் வெளிச்சத்தில் சிறைப்பட்ட இரவின் துண்டு துண்டான அழைப்புகளுக்கு செவிமெடுத்ததால் எழுதப்பட்டவை என்பதால் நள்ளிரவின் சொற்கள் என்ற தலைப்பின் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
சிறுகதை, நெடுங்கதை, திறனாய்வு, இலக்கிய மற்றும் பொதுக் கட்டுரைகளைத் தொடர்ந்து கவிதைகளும்…