காந்தி நம்மை நோக்கி விடுக்கும் சவால் என்பது- நாம் நம் எண்ணங்களின்படி வாழ்வதில் உள்ளது, நமது நம்பிக்கைகளுக்கு ஏற்ப நமது வாழ்வையும் வாழ்க்கைமுறையையும் மாற்றிக் கொள்வதில் உள்ளது, மாற்றத்திற்கான கோஷங்களை வெறுமே எழுப்புவதோடு நில்லாமல் நம்மை நாமே மாற்றிக்கொள்வதில் உள்ளது. ஆக காந்திய வாழ்க்கைமுறையின் பலமும் ஆற்றலும் மூளையை திருப்திபடுத்தும் தர்க்கங்களால் அல்லது தெளிவிலிருந்து உருவாவதில்லை, மாறாக அதைப் பின்பற்றுபவர்களின் ஆளுமையில் உள்ள ஓர்மையில் உள்ளது. ஒரு வார்த்தையில், தரவிற்க்கும் மதீப்பிட்டிற்கும் இடையிலான பிளவை காந்தி எதிர்க்கிறார், அல்லது எண்ணத்திற்கும், சொற்களுக்கும், செயல்களுக்கும் இடையிலான பிளவை எதிர்க்கிறார். காந்தியராக இருப்பதென்பது ஒருவரின் வாழ்க்கைமுறை, வாழ்க்கைப்பாணி, நுகர்வின் வகைமாதிரி, சிந்தனை முறைமை ஆகியவை ஒருங்கிணைந்து ஒத்துப் போகும் முழுமையான வழிமுறையை தேடிக் கண்டடைவதாகும்.- மகரந்த் பரஞ்சபே, நவகாந்திய வாழ்க்கை முறை.