ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உணர்ச்சியை, சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கிவிடுகிறது. முன்னூற்றிச் சொச்சம் சொற்களுக்குள் ஒரு திடகாத்திரமான கதையை அவரால் படைத்துவிடவும் முடிகிறது. தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல்கூடத் தழும்பிச் சிதறுவதில்லை. வர்க்கப் பாகுபாட்டில் கீழ்நிலையிலுள்ள ஒரு மனுஷியின் மனுஷனின் அன்றாடம்தான் இவரது கதைகளின் ஆதாரம். அவர்களின் அன்றாடத்திலிருந்து ஒரேயொரு சம்பவத்தை அதன் நெஞ்சுத் துடிப்புடன் எடுத்து கதையாக நம்முன் வைக்கிறார். அந்தச் சிறு சம்பவம் அந்த மனுஷர்களின் ஒரு ஜன்ம வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது. மண்குதிரை A collection of stories by renowned writer and poet Mu.Suyambulingam. Mu.Suyambulingam’s volume of work and his reputation are indirectly proportional. In his works, he remains a poet of few words. But the words are chosen with care and are capable of conveying emotions that require a paragraph otherwise. He can create a strong story in couple of pages, with no words unnecessary. His are the stories of men and women in the lowest levels of class hierarchy. These stories are from their everyday life with the warmth of flesh and blood. It says more than anyone can of the people’s lifetime. மு. சுயம்புலிங்கம்: மு. சுயம்புலிங்கம் (பி. 1944) சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை. தந்தை முனியசாமி நாடார், தாயார் பெரிய பிராட்டி. தாமரை இதழில் முதல் கதை வெளிவந்தது. அதே இதழில்தான் கந்தர்வனின் முதல் கதையும் வெளிவந்தது. 1970களில் நாட்டுப் பூக்கள் என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். கி. ராஜநாராயணன் முயற்சியால் இவரது கையெழுத்துப் படியிலிருந்து தேர்ந்தெடுத்த எழுத்துகள் கோணங்கி நடத்திவரும் கல்குதிரை சிறப்பிதழில் 1990வாக்கில் வெளிவந்தது கவனம் பெற்றது. இவரது எழுத்துகள் ‘ஊர் கூட்டம்’, ‘நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்’, ‘ஒரு பனங்காட்டு கிராமம்’ என மூன்று தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன. தற்போது சங்க இலக்கிய நூலான நற்றிணையிலிருந்து நூறு பாடல்களைத் தேர்வுசெய்து அதனடிப்படையில் கதைகள் எழுதிவருகிறார்.