எல்லா வகையிலும் பாவனைகள் சூழ் உலகில், மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் நடித்துக் கொள்வது மிக இயல்பே என நினைக்கிறேன். ஆனால் வைரவனின் உலகில் வேறு வகையான மனிதர்கள். அவர்களுக்கு இன்னொரு மனிதனை அணுகுவதில் எந்த சிக்கலுமில்லை. அவர்களை தங்களவர்களாக இன்னும் அணுக்கமாக நினைத்துக் கொள்ளும் எளிய மனிதர்கள்.