மெட்ரோவாசியான இளங்கோவுக்கு,தான் கடந்து சென்ற,விரும்பிய அல்லது விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுக்களில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகனைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது.ஆனால் அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற வடிவத்தில்,சொற்களை இறைக்காத,காட்சிகளை 70 MM திரை போல் முழுமையாக நிரப்பாமல்,சம்பவங்களைச் சொல்லியும் உரையாடல் வழியாகவும் உளவியல் அடிப்படையைக் களமாகக் கொண்டிருக்கும் இந்த கவிதைக்காரனின் கதைகள்,இறங்கும் தருவாயில் ரோலர் கோஸ்டரின் பயணிக்க அழைக்கிறது.