நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக் கண்டடைகின்றன நந்தாகுமாரனின் கவிதைகளில். நந்தாகுமாரனின் பிரவாகமான கவிதை மொழி சில கவிதைகளில் பிரவாகத்தை நிறுத்தித் தத்தளிப்பையும் பகடியையும் கைமாற்றுகிறது. வாரி இறைக்கப்படும் சொற்களுக்கு மத்தியிலும் கவிதையின் தருணங்கள் கூடுகின்றன. கவிதையொன்று கவிதையாகாமலிருப்பதன் பின்னணியையும் நந்தாவின் கவிதை மொழி விசாரிக்கிறது. இத்தொகுப்பின் தனித்துவமாக இவ்விசாரணையைக் காணமுடியும்.