பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ரகசியமாக ஏற்படுத்தும் உக்ர விவாதம் கதையின் மேல் அமைப்பில் பல்வேறு நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் கதை அமைப்புக்கொள்கின்றன. இது ஓர் அசாத்திய சாதனை என்று தோன்றுகிறது. இந்தக் கதைக்கான தயாரிப்பு கடந்த முப்பது வருடங்கள் ஸ்ரீதரனுக்கு. ஸ்ரீதரன்: ஸ்ரீதரன் அமெரிக்க கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984இல் ஆராய்ச்சியாளராகவும், பின்னர் 1985 – 1988 வரை உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றிய பின் 1989இல் ஒஹையோ மாநிலத்தில் மத்திய மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Central State University) பதினான்கு ஆண்டுகளாக நீரியல்வள மேலாண்மைத் (Water Resources Management) துறையின் தலைவராகச் செயல்பட்ட பின், தற்போது அப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் கல்லூரியின் (College of Science and Engineering) பீடாதிபதியாகப் பணியாற்றுகிறார். இவர் அமெரிக்க குடிசார் பொறியியல் சங்கத்தின் (American Society of Civil Engineers) உறுப்பினராகவும், அச்சங்கத்தின் நீர்ப்பாசனம் – வடிகால் ஆராய்ச்சிச் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.