ஹாரி பாட்டரின் சாகசங்கள் இப்புத்தகத்தில் இன்னும் சுவாரசியமாகத் தொடர்கின்றன. அவன் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாக்வார்த்சுக்குப் படிக்கச் செல்லக்கூடாது என்றும், அப்படி அவன் அதை மீறிச் சென்றால் பெரும் விபரீதங்கள் விளையும் என்றும் ஒரு வினோத பிராணி ‘டாபி’ அவனை எச்சரிக்கிறது. அதை அலட்ச்சியம் செய்துவிட்டு ஹாரி ஹாக்வார்த்சுக்கு திரும்பி செல்கிறான்…. பக்கத்திற்குப் பக்கம் மாயாஜாலம், படுசுவாரசியமான கதையோட்டம், வாசர்களால் ஊகிக்க முடியாத திகிலான திருப்பங்கள் ஆகியவை நிறைந்துள்ள இப்புத்தகத்தை கையில் எடுத்தால் எவரொருவராலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது!