ஒரு முழு நிலவு நாளின் மாலையில் தொடங்கி விடியலில் நிறைவதே, ‘முழு நிலவின் முன்துணையே’ குறுநாவல்.
உறங்கச் செல்லும்போது வருகிற நிலவை விட, விழிப்பில் வருகிற சூரியனின் தேவை மிக அதிகம். கோடிக்கணக்கான தாவரங்களை உயிர்ப்பிக்கும் அதன் செயல்கள் மிக அவசியம். ஆனாலும், நிலவையே அதிகம் நேசிக்கிறோம். ஏனெனில், அது தன் செயல்களை மிக மென்மையாக வெளிப்படுத்துகிறது.
ஆக்ரோஷமாக ஆயிரம் பெறுவதை விட அன்புடன் பெறுகிற ஒன்று நம்மை அதிகம் திருப்தி செய்துவிடுகிறது. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். அவர்கள் மாபெரும் செயல்களைச் சாத்தியப்படுத்தும் சக்தி படைத்தவர்களல்ல. ஆனால், தன்னைச் சார்ந்தோருக்கு எளிய வழியில் அன்பை அள்ளித் தருகிறார்கள். இதில் வருகிற அப்துல் அஹத் மட்டுமின்றி, நண்பன், காதலி, காதலியின் தங்கை, தந்தை என அனைவருமே நாயகர்களே. அனைவரும் மென்மையாக அன்பை அள்ளித் தருகிற நிலவுகளே.
Reviews
There are no reviews yet.