கொலைஞானம்

மானுடவியலாளர்களின் கருத்துப்ப விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதன் வேட்டைக்காரனிலிருடி நவ நாகரீக மனிதனாகி, அதன் பின்பு பல்லாயிரக்கணக்க ஆண்டுகள் கழித்து, பெரும் நாகரிகங்களாக உருவான பின்பு வ வலுத்தவர்கள் எழுதியதே, அல்லது பதிவு செய்ததே நாம் இதுவ அறிந்திருக்கக் கூடிய வரலாறாக அமைந்திருக்கிறது.

60 லட்சம் வருடங்களுக்கு முன்பு பரிணாமத்தின் படிகள் மனிதன் ஏறி வந்தான் என்ற போதிலும் ‘மாடர்ன் மேன்” எனப்படும் ஹோமோ சேப்பியன்ஸ், இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பது என்னவோ இரண்டு லட்சம் வருடங்களாகத்தான். இந்த நீண்ட காலகட்டத்தில் வெறும் 5000 வருடங்களுக்கான வரலாறு மட்டுமே இதுவரை பதியப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளினுடைய வரலாறுகள் கி.பி. 1500ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டங்கள் இன்று வரை தெளிவில்லாமலேயே இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானாவை மறைக்கப்பட்டவையோ அல்லது சிதைக்கப்பட்டவையாகவோதான் இருக்கின்றன.

நாகர்கோவிலில் நான் நெடுஞ்சாலையோரம் பார்த்த சில கல் மண்டபங்களைக் கடந்து பயணிக்கும் போதெல்லாம். இவை வரலாற்றின் எந்த பகுதிக்கு உரியவை ? இவை எதற்காக பயன்படுத்தப்பட்டன? இவற்றின் உள்ளே என்னதான் இருக்கின்றது. அல்லது இருந்தது?. ஏன் அரண்மனைகளை போல், வரலாற்றுச் சின்னங்கள் போல் இவை பதியப்பட்ட வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என பற்பல கேள்விகள் மனதில் ஓடியதன் விளைவாக, சிறிது வரலாறும், பெரிதும் கற்பனையும் கலந்து உருவானதுதான் கொலைஞானம் என்ற இந்த கற்பனை வரலாறு.

சூ.மா.இளஞ்செழியன்

நாகர்கோவிலை சேர்ந்த இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவமும்,சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை எலும்பு முறிவு மருத்துவமும் பயின்றவர். தற்போது மஸ்கட்டில் எலும்பு முறிவு மருத்துவராக பணிபுரிகிறார்.
கட்டுரைகள் எழுதியுள்ள இவர், சமூக ஊடகங்களில் பல கவிதைகள் பெருங்கதையாக எழுதிய முதல் படைப்பு இதுவே.