வஞ்சகமும் ஏமாற்றங்களும் மட்டுமல்லாமல் நம்பிக்கையின்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு மாற்று நம்பிக்கையைத் தருகின்றது இந்த நூல். இந்தியாவின் துணைக்கண்ட மாண்பு எதனால் ஆகிவந்திருக்கிறது? இந்தியாவின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் சவால்கள் உருவாகும் சமயத்தில், இம்மண்ணிலிருந்தே...
எந்தக் காலவரிசையிலும் அடங்காத வகையில் தன் நினைவிலிருந்து சொல்வதுபோல சித்தலிங்கையா பல அனுபவங்களை இந்தத் தன்வரலாற்றுப் பிரதியில் முன்வைக்கிறார். ஏற்கெனவே வெளிவந்த ‘ஊரும் சேரியும்’ நூலின் இரண்டாவது பகுதியாக ‘வாழ்வின் தடங்கள்’ உருவாகியிருக்கிறது. தனித்தனியாகப்...
அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப்பிடித்து கடந்து முன்செல்லும். ‘வைரஸ் கதைகள்’ எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலகட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண்முன் ஒரு டிஸ்டோபிய உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்காக்கும் கருவியுள்ளது. மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதை பொருத்த முடியும். எப்பேர்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்கு காரணமான சிக்கலை காட்டிலும் பூதாகாரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்க கூடுமா? எத்தனை கேள்விகள்!
: ‘விஷக்கிணறு’ அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.
‘விவேக சிந்தமாணி’ மாத இதழில், பல சிறுகதைகள் மாதந்தோறும் வெளியாகியிருக்கின்றன. .நீதிபோதனைகளாகவும், சம்பவ விவரிப்புகளாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் இருந்த அவற்றை, சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள் என்று மதிப்பிடலாம்.
கடந்த நூற்றாண்டுகளில் துவங்கிய இச்சிறுகதை மரபு வளர்ந்து, ஒரு பக்கக் கதைகள், அரைப்பக்கக் கதைகள் ஆகி, இன்றைக்கு ‘ட்விட்டர் கதைகள்’ ஆகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது அதன் வீரியமிக்க பாய்ச்சலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தலைமுறையில் பலரும் அறிந்திராத, படித்திராத அரிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை, கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சமூகப்பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஓர் வாயிலாக இச்சிறுகதைத் தொகுப்பைக் கருதலாம்.
ஆசிரியர் குறிப்பு, நிழற்படம், படைப்புகள் பங்குபெற்ற இதழின் படங்கள், கதைகளின் கதை, சிறுகதைகள் கொண்ட ஆய்வு நூல்.
ஆதியில் சொற்கள் இருந்தன
அதற்கு சிறகுகளும் இருந்தன
பசி தாகம் கொண்ட சிறுவன்
பறந்து கொண்டிருந்த ஒரு சொல்லை
நிலத்தில் வீழ்த்திய போது
கடல் நிறைந்தது
அவன் கல்லெறிய கல்லெறிய
தாவரங்களும்
விலங்குகளும்
பறவைகளும்
பல்லுயிர்களும்
வந்தன
யாவும் யாவும் யாவும் அப்படியே வந்தன
நான் நெஞ்சிலிருந்து ஓர் அன்பை எடுத்து
வானில் எறிகிறேன்
அது சொல்லாகிப் பறக்கிறது
எல்லா கவிதையிலும் படர்வது
அதன் நிழலே.
நூல் முழுவதும் இப்படியான கவிதைகளை
ஐந்து தலைப்புகளில் எழுதி இருக்கிறார் நண்பர் இளங்கோ கிருஷ்ணன்
பிரமிளா அதிகமாக எழுதுபவர் இல்லை. ஒவ்வொரு கதைக்கும் கால இடைவெளி எடுத்துக் கொள்பவர். அல்லிராணியே கடைசிக்கதையாக இருக்க வேண்டும், எனில் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது.
வார்த்தை சிக்கனம் இவரது பெரும்பாலான கதைகளில் கையாளப்பட்டிருக்கும். வாசகர் விஸ்தரித்துக் கொள்ள இடைவெளிகளை வேண்டுமென்றே கதைகளில் விட்டிருப்பார்.
இந்தத் தொகுப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகச்சிறப்பான அறிமுகமாக இருக்கும். சில மணிநேரம் விரும்பித் தொலையலாம் இந்தக் கதைகளில்.
இந்த நூலிலுள்ள பன்னிரெண்டு கட்டுரைகளில் அவரது கலை இலக்கிய அக்கறைகளை வளமான மொழியாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார். எளிமையான நடையில் தீர்க்கமான கருத்துக்களை முன் வைக்கின்றார். தமிழ்நாட்டு சிறுபத்திரிக்கை தமிழ்நடைக்கு பரிச்சயமான நமக்கு, மேடையில் வீசும் ஒரு மெல்லிய பூங்காற்று போல் ஈழத்தமிழ் வருகின்றது. துல்லியமான சொற்பயன்பாடும் தெளிந்த நடையோட்டமும் நம்மை ஈர்க்கின்றது.
-தியடோர் பாஸ்கரன்
வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க முடியாதவை. அலைகளைப் போல முடிவற்று நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில், முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதி செய்ய முயல்கின்றன இக்கதைகள்.