நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித் தனி வழியே நடப்பவர். அவரது கவிதைகளும் பிரத்தியேகமானவையாகத் தனித்து நிற்பவை. தோற்றத்தில் எளிமையாகத் தென்படும்...
கபீர் பாடல்கள் வாய்மொழிப்பாடல்களாகவே பிரபலமடைந்தன. பேச்சு மொழியில் அமைந்த அவரது ஈரடிப் பாடல்களைச் சாதாரண மக்கள் பரவலாக பாடினர். இடைக்காலப் பக்தி இயக்கத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் கபீர்...
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள். பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை...
நல்லோர்களை பெற்றோர்களாய் வாய்க்கப்பெற்றவர்களும், ஊர் மெச்சும் மக்கட்பேறு பெற்றவர்களும் கொண்ட பெருமைக்கு நிகரானது நல்லாட்சி புரியும் ஆட்சியாளரின் ஆளுமைக்குட்பட்ட நிலத்தில் வாழ்வது. அப்படியான பெருமிதத்தை தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் விதைத்திருக்கும் உன்னத முதல்வர்...
ஒரு சொல் ‘கொன்னுட்டேடா’. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கோவத்தில் உக்கிரம். கலவிக்குப்பின் அர்ப்பணம். நண்பர் கவிஞர் வதிலைபிரபாவின் ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் அப்படித்தான், படிப்பவர்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்ற...
எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்றது. தன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப்பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன அவரது கவிதைகள். மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற...
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை...
உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நிரந்தரப்படுத்த விரும்புகிறார் எஸ். செந்தில் குமார். ‘கைப்பையைப் பாதுகாப்பது போலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்’, ‘குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்’ என்னும் உருவற்ற உருவங்களும்...
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
காலத்தைக் கடந்து நிற்கும் இலக்கியங்கள் தொடர்ச்சியாகச் செம்மைப் படுத்தப்பட்டுக்கொண்டே வரும். வால்மீகியின் கதையை விருத்தங்களால் அலங்கரித்துத் தமிழுக்கு அழகு சேர்த்தான் கம்பன். கம்பன் பார்வைக்கு நவீனத் தமிழ் விருத்தங்களால் அழகு சேர்க்கிறது இந்தப் புத்தகம்....