வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது....
எளிமையான கதைகளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966 வரை சுந்தர ராமசாமி எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த இக்கதைகள் வாசிக்க எளிமையானவை. அதே சமயம் கூர்மையும் நுட்பமும்...
எழுத்துலகில் கவிதையை நயம் சுவைக்கச் சுவைக்கப் படைத்து, எதுகை மோனைகள் இணைய கவிஞர்களாக வலம் வரலாம். கட்டுரை எழுதி விறுவிறுப்பைக் கூட்டி, எதிர்பார்ப்புகளைத் தொடர வைத்து கட்டுரையாளராகக் கோலோச்சலாம். இங்கு கதை ஆசிரியராக தங்கமங்கை...
மனித குலத்தில் வகைமைக்குப் பஞ்சமில்லை. வகைமைமீது கொண்டிருக்கும் பிரியம் இந்தப் பக்கங்களில் உறுதிப்பட்டிருக்கிறது. இது உண்மையில் முழுமைமீது கொள்ளும் விருப்பம்தான். (குமாரசெல்வா) தன் அனுபவ உலகத்தை ஒட்டி நின்று பெற்று, விலகி நின்று சொல்கிறார்....
தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும் அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானவை. சமூகம் தன்னகத்தே...
1980களில் கதை சொல்லவந்த ஆபிதீன், நவீனத் தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார். சாமான்ய முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள், ஆன்மிகத்தின் போர்வையால் மறைந்துகிடக்கும் சிறுமைகள் என பேரழகுக் கோலங்களாலும் அதற்கு நிகரான...
தீவிரவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சூஃபி சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் உழன்று வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதையின் சுல்தான்; அக உணர்வுகளைப்...
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு...
நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது...
நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின்...
மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.