வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள். கடந்த ஐந்தாண்டுகளில்...
மந்திரமாவது சொல் என்ற சொல்லாடல், காத்திரமான சொற்ப கவிதைகளுக்கும், சிறுகதை வடிவத்துக்கும் மாத்திரமே பொருந்துகிறது. சிறுகதை எழுதும் பல தொடக்க எழுத்தாளர்கள் எழுத விஷயமிருந்தும், வடிவம் பிடிபடாமல் தவிப்பது அவர்களின் எழுத்தில் தெரிகிறது. வடிவம்...
சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாக குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற...
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே...
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்”...
சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய முன்னோடி என்று காட்டக்கூடிய எழுத்தாளர் எவரும் அவருக்கு முந்தைய தலைமுறையில் இல்லை....
அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும்...
உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள்...
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும்...
மு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாதவர்கள். தப்புவதற்கான வழியோ முனைப்போ அற்றவர்கள். தம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட கழிவுகளையும் துர்நாற்றங்களையும்...
எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன்...